ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.போர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.போரில் தோல்வி அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான். இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனை கூப்பிடுகிறார்.
"என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் அண்ணா?
தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை நன்கு அறிந்தவன். நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பி சென்றான்.
ராவணன் தலைமாட்டுகருகில் நின்றான்.காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை.ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார்.
"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார். இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன். அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை.
"தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றி கூறுகிறேன்."
1.வாட்ஸ்ப்புக்குள் போகாதே.
2. முகநூலைத் தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.
3. வாகனம் ஓட்டும் போது கைபேசியை கையில் வைத்துக்கொள்ளாதே".
என்பதுதான்...
Whatsapp Jokes, Quiz, Puzzles, Riddles And Messages, Tamil Whatsapp Motivational Kavithai, Whatsaap forwards, Whatsaap messages, Whatsaap Jokes
Ramayana whatsapp forward message
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment